இனி சகோதரன் வலைப்பூவில் தொடராக |
அன்பர்களுக்கு,
இந்த வலைப்பூவினை 2010 ஏப்ரல் மாதம் தொடங்கினேன். அதன் பின் சில இடுகைகள் மட்டுமே என்னால் இட முடிந்தது. போதிய வரவேற்பு இல்லாததால் மனம் இதில் ஈடுபட மறுத்து கவணம் வேறு பக்கம் சென்றது. சகோதரன் வலைப்பூவில் அவ்வப்போது எண்ணங்களை பகிர்ந்து வந்தாலும், இந்து மதம் பற்றிய தேடல்களும் சில பொக்கிசங்கள் கிடைப்பதும் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அதை எழுதுகின்ற உந்துதல் வராமல் போனது.
இந்நிலையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் நண்பர் கடந்த நாட்களில் தொடர்பு கொண்டு தாங்கள் வெளியிடுகின்ற புத்தகத்தில் இந்தக்கட்டுரைகளை வெளியிட விருப்பம் தெரிவித்தார். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. இந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் இன்று என் பெயரை தாங்கி அந்த புத்தகங்களின் கட்டுரையாக வரும் அளவிற்கு இந்தக் கட்டுரைகளுக்கு வலிமை இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
மீண்டும் இந்த தளத்திற்கு வரும் போது, அதிர்ச்சியாக இருந்தது. வெறும் நான்கே நான்கு கட்டுரைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்து மதத்தின் ஞான மரபுகளை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். தேவனூர் என்ற திருவண்ணாமலைக்கு அருகே உள்ள இடத்தில் மகாதேவனார் கோவில் சிதலமைடைந்து கிடந்த நிலையில் இருக்கிறது. அதனை சில அன்பர்கள் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு சென்றேன். அந்த ஒரு கோவிலில் மட்டுமே அத்தனை பொக்கிசங்கள்,கலைகள்,கட்டுமான திறன், வரலாறு என்று ஏகம் இருந்தன.
நமது உலகில் இருக்கும் கோடிகோடியான பொக்கிசங்களை மீண்டும் தேடவும், தேடியதை தரவும் உறுதி கொண்டேன். இந்த முயற்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றய சகோதரன் வலைப்பூவிலே தொடராக எழுதலாம் என்றும், பின் அவற்றை தனியாக இங்கே தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
நன்றி,.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)